தாய் வளர்ச்சி ஊடுபொருள் கலவை தயாரித்தல் :
நீர்நொதி ஊட்ட ஊடகம் தயாரித்தல் :
குளுக்கோஸ் : 5.0 கி
பெப்டோன் : 5கி
மாட்டிறைச்சிச் சாறு : 3 கி
சோடியம் குளோரைடு : 3கி
வடிநீர் : 1000 மிலி
மேற்கண்ட ஊடகத்தை கூம்பு குடுவையில் ஊற்றி 15 1b அழுத்தத்தில் 15 நிமிடத்திற்கு அழுத்த அனற்கலனில் வைக்கவும். பின் சிறு கம்பி வலையில் பே. சப்டில்லிஸ் யை ஊடகத்தினுள் செலுத்தி 2 நாட்களுக்கு வைக்கவும். இதனை தாய் வளர்ச்சி ஊடுபொருள் கலவையாக பயன்படுத்தவும்.
பேரளவு உற்பத்தி :
ஊட்ட ஊடகத்தை நொதிகலனில் ஊற்றி 15 1b அழுத்தத்தில் 15 நிமிடத்திற்கு கிருமி நீக்கம் செய்யவும். பின் தாய் வளர்ச்சி ஊடுபொருள் கலவை 1.0 லிட்டருக்கு 100 லிட்டர் ஊடகம் என்றளவில் சேர்த்து, அறை வெப்பநிலையில் 2 நாட்களுக்கு வைக்கவும். பின் ஊடகத்தில் வளர்ந்த பாக்டீரியாவை சீமைச் சுண்ணாம்புக் கல்லுடன் சேர்த்து விநியோகிக்கவும். |